செய்திகள்

ஷுப்மன் கில், ரிஷப் பந்துக்கு இடமில்லை: முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கிகிறது. முதல் டெஸ்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

முதல் டெஸ்ட் நாளை முதல் அடிலெய்டில் தொடங்குகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. தொடக்க வீரராக பிரித்வி ஷா களமிறங்குகிறார். விக்கெட் கீப்பர் வாய்ப்பு சஹாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், ஷமி, பும்ரா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு! இரு காவலர்கள் கவலைக்கிடம்!

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT