முகப்பு
செய்திகள்

மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்: கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்காலேயே தோல்வியடைந்தோம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்காலேயே தோல்வியடைந்தோம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: இரண்டாவது இன்னிங்ஸில் எங்கள் அணியின் பேட்டிங் மிக மோசமாக அமைந்தது. இதைவிட மோசமான பேட்டிங் எதுவும் இருக்க முடியாது. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சரிவிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லும் தீவிரம் இன்றி எங்கள் பேட்ஸ்மேன்கள் விளையாடினா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →