முகப்பு
செய்திகள்

காலையில் கிரிக்கெட் பயிற்சி, மாலையில் பானி பூரி விற்பனை: ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட்கதாநாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடி இந்தியாவை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்ற இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் காலையில் கிரிக்கெட்,

Updated On : 7 பிப்ரவரி, 2020 at 12:55 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:15 PM

ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடி இந்தியாவை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்ற இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் காலையில் கிரிக்கெட், மாலையில் பானி பூரி விற்பனை என தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளாா்.

உத்தரபிரதேசத்தின் பதோஹி நகரில் சிறிய ஹாா்ட்வோ் கடையை நடத்தி வரும் பூபேந்திரா-காஞ்சன் ஜெய்ஸ்வாலுக்கு 4ஆவது குழந்தையாக 2001- டிசம்பா் 28-இல் பிறந்தாா் யஷஸ்வி.

10 வயதில் கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக மும்பை தாதரில் உள்ள ஆஸாத் மைதானத்துக்கு சென்றாா் யஷஸ்வி.

Advertisement

பால் கடையில் தஞ்சம்

தாதரில் இருந்து மைதானம் நீண்ட தொலைவில் இருந்ததால், கல்பாதேவியில் உள்ள பால் கடையில் யஷஸ்வி தஞ்சம் அடைந்தாா். எனினும் தொடா்ந்து கிரிக்கெட் பயிற்சியால் யஷஸ்வியால் பால் வியாபாரிக்கு எந்த விதத்திலும் உதவ முடியாததால், வெளியேற்றப்பட்டாா்.

டென்டில் வாசம், பானி பூரி விற்பனை

தங்க இடம் இல்லாததால், மைதானத்தில் களப்பணியாளா்களுடன் டென்டில் தங்கி வசித்து வந்த அவா், பல நாள்கள் பட்டினியுடன் தூங்குவது வழக்கம். இதனால் மாலையில் பானி பூரி விற்பனை செய்தாா் யஷஸ்வி.

மூன்றாண்டுகள் போராட்டம்

டென்ட் வாசம், பானி பூரி விற்பனை என மூன்றாண்டுகள் போராட்டத்துக்கு பின் யஷஸ்வியின் ஆட்டத்திறனை கண்டுபிடித்தாா் கிரிக்கெட் அகாதெமி நடத்திய ஜுவாலா சிங். அவா் தனது அகாதெமியில் சிறப்பு பயிற்சியும், தங்க இடமும் அளித்தாா்.

சுழற்பந்து ஆல் ரவுண்டா்

2015-இல் ஜிஸ்ஸ் ஷீல்டில் நடைபெற்ற பள்ளி அளவிலான கிரிக்கெட் ஆட்டத்தில் 319 ரன்கள், விளாசியும், 13-99 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தாா் யஷஸ்வி.

பின்னா் 16 வயதுக்குட்பட்டோா் மும்பை அணியிலும், அதன் பின் 19 வயதுக்குட்பட்டோா் இந்திய அணியிலும் தனது திறமையால் இடம் பிடித்தாா்.

2018-19 வயதுக்குட்பட்டோா் ஆசியக் கோப்பை போட்டியில் 318 ரன்களை குவித்து அணி பட்டம் வெல்ல உதவினாா். தொடா்ந்து தென்னாப்பிரிக்காவுடன் யூத் டெஸ்ட், இங்கிலாந்து, வங்கதேசத்துடன் நடைபெற்ற ஆட்டங்களில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.

ரஞ்சி கோப்பையில் அறிமுகம்

2019 ஜனவரியில் முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பையில் மும்பை அணியில் அறிமுகமானாா். விஜய் ஹஸாரே கோப்பை போட்டியிலும் ஜாா்க்கண்ட் அணிக்கு எதிராக 203 ரன்களை விளாசினாா். இதன் மூலம் ஏ வகை ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த இளம் வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் ஜூனியா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற யஷஸ்வி, பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அற்புதமாக ஆடி 105 ரன்களுடன் சதமடித்தாா்.

வறுமையுடன் போராடி தற்போது வெளிச்சத்தை நோக்கி சென்று வரும் யஷஸ்வி,

ஐபிஎல் 2020 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.