செய்திகள்

5 ஆண்டுகளில் முதன்முறையாக பேட் செய்த சச்சின்: அதுவும் முதல் பந்திலேயே பவுண்டரி (விடியோ)

DIN


கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக பேட்டை கையிலெடுத்த சச்சின் டெண்டுல்கர் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் காட்டுத் தீ பரவி வருகிறது. ஏராளமான வீடுகள் எரிந்து நாசமாகின. இந்தக் காட்டுத் தீயில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பலியாகின. சுமாா் 60 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத் தீக்கு இரையாகியுள்ளன.

காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காகப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கண்காட்சி கிரிக்கெட் ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்னில் நடைபெற்றது.

புஷ்ஃபயர் கிரிக்கெட் பேஷ் என்கிற பெயரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஷேன் வாட்சன், பிரையன் லாரா, மேத்யூ ஹேடன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், யுவ்ராஜ் சிங், வாசிம் அக்ரம் போன்றோர் பங்கேற்றனர். இதில், பாண்டிங் தலைமையிலான அணி கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியை வெறும் 1 ரன்னில் வென்றது.

இந்த ஆட்டத்தின் நடுவே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரி சவாலை ஏற்று சச்சின் டெண்டுல்கர் அவரது ஓவரில் பேட்டிங் செய்தார்.

இதில் களமிறங்குவதற்காக மைதானக்குள் நுழையும்போது அவர் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் தற்போதுதான் முதன்முறையாக பேட்டை கையில் எடுத்துள்ளேன்" என்றார். இருந்தபோதிலும் அவர் தனது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். சச்சின் களமிறங்கும்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "சச்சின்..சச்சின்.." என கோஷம் எழுப்பினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மைதானத்தில் எழும்பிய "சச்சின்..சச்சின்.." என்ற கோஷம் இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT