செய்திகள்

வெலிங்டன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 183 ரன்கள் முன்னிலை

DIN

வெலிங்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் வெள்ளிக்கிழமை வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 68.1 ஓவர்களில் 165 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார்.

நியூஸி தரப்பில் டிம் சௌதி 4-49, ஜேமிஸன் 4-39, டிம் சௌதி, பௌல்ட் 1 விக்கெட்டையும் சாய்த்தனா்.

இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 3ஆம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்ஸில் 100.2 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 183 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்ஸன் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 5-68 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT