செய்திகள்

வெலிங்டன் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

4ஆவது நாளிலேயே முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது.

DIN

4ஆவது நாளிலேயே முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடாின் முதல் போட்டி வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். நியூஸி தரப்பில் டிம் சௌதி 4-49, ஜேமிஸன் 4-39, விக்கெட்டுகளைச் சாய்த்தனா்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்ஸன் 89 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 5-68 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

183 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி மீண்டும் 191 ரன்களுக்குச் சுருண்டது. மயங்க் அகர்வால் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூஸி. தரப்பில் டிம் சௌதி 5-61, பௌல்ட் 4-39 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 9 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100ஆவது வெற்றியையும் பதிவு செய்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

மொத்தம் 9-110 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சௌதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி குத்தாட்டத்தில் அப்தி அப்தி!

பிக் பாஸ் சென்ற பிரபலம்! சிந்து பைரவி தொடர் நடிகர் மாற்றம்!

பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?: அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பு: பிரதமர் மோடி!

அரசு திட்டங்கள் பெயரில் மோசடி! மக்களே உஷார்! | Cyber Shield

SCROLL FOR NEXT