தென் ஆப்பிரிக்காவில் நேற்று முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டம் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்றது.
உள்ளூர் அணி தான் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 29.1 ஓவர்களில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. ஆப்கானிஸ்தானின் 18 வயது சுழற்பந்துவீச்சாளர் சஃபிகுல்லா கஃபாரி, 9.1 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் பிறகு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்ராஹிம் ஸத்ரான், இம்ரான் ஆகிய இருவரும் அரை சதமெடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.