செய்திகள்

அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய வீரர்!

தரவரிசையில் 122-ம் இடத்தில் உள்ள பிரஜ்னேஷ் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில்

எழில்

இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 6-7, 2-6 என லட்வியாவின் எர்னெஸ்ட்ஸ் குல்பிஸுடன் தோல்வியடைந்தார். இதனால் அவரால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டது.

ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் வேறு வகையில் அமைந்தது. சில வீரர்கள் காயங்கள் காரணமாகவும் ஊக்க மருந்து விவகாரம் சார்பாக இன்னொரு வீரரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்தியாவின் பிரஜ்னேஷ், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முதல் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.  

தரவரிசையில் 122-ம் இடத்தில் உள்ள பிரஜ்னேஷ் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் தத்சுமா இடோவை எதிர்கொள்கிறார். இதில் மட்டும் அவர் வெற்றி பெற்றுவிட்டால், 2-வது சுற்றில் முன்னணி வீரர் ஜோகோவிச்சை எதிர்கொள்ள நேரிடும். கடந்த வருடம் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் முதல் சுற்றுக்குத் தகுதி பெற்ற பிரஜ்னேஷ் இந்த வருடம் தொடங்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியிலும் தகுதி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர் விநியோகித்த ராணுவம்!

ஜெருசலேமில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி! பிரதமர் மோடி கடும் கண்டனம்!

நெளிவு சுழிவு... அனன்யா!

எமது நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவுக்கு நல்ல காலம்! - டிரம்ப்

அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்! இந்தியர்களுக்கு பாதிப்பா?

SCROLL FOR NEXT