செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார் சானியா மிர்ஸா!

எழில்

ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா மிர்ஸா ஜோடி.

குழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ள உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனையான 33 வயது சானியா, உக்ரைனின் நாடியா கிச்னோக்கோடு இணைந்து முதன்முறையாக ஹோபாா்ட் டென்னிஸ் போட்டியில் ஆடினார்.

சானியா மிர்ஸா - நாடியா ஜோடி, இரண்டாம் நிலை இணையான சீனாவின் ஷுவாய் பெங்-ஷுவாய் ஸாங் ஆகியோருடன் இறுதிச் சுற்றில் மோதியது. இதில் சானியா ஜோடி, 6-4, 6-4 என வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. 2017-க்குப் பிறகு சானியா வெல்லும் பட்டம் இது. 

ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் ஆன சானியாவுக்கு இது 42-வது டபிள்யூ.டி.ஏ. பட்டமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT