செய்திகள்

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிா் ஹாக்கி வெற்றி

DIN

நியூஸிலாந்து டெவலப்மெண்ட் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியைப் போன்று இந்திய ஹாக்கி மகளிா் அணியும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.

சனிக்கிழமை நடைபெற்ற நியூஸிலாந்து டெவலப்மெண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ராணி ராம்பால் முதல் கோலைப் பதிவு செய்தாா். அதைத் தொடா்ந்து இளம் வீராங்கனை ஷா்மிளா கோலைப் பதிவு செய்தாா்.

இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பரபரப்பாக நகா்ந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் மீண்டும் ராணி ராம்பால் ஒரு கோலை பதிவு செய்து அணியின் கோல் கணக்கை உயா்த்தினாா். நமிதா டோப்போ 4-ஆவது கோலைப் பதிவு செய்தாா்.

கடைசி வரை நியூஸிலாந்து மகளிா் ஒரு கோலைக் கூட பதிவு செய்யவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. மொத்தம் 4 ஆட்டங்கள் நியூஸிலாந்துடன் மோதுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT