செய்திகள்

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் முதல் டெஸ்ட்: ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

DIN

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று முதல் செளதாம்ப்டனில் தொடங்குகிறது. 

மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கி, ஜூலை 28 அன்று முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் முதல் டெஸ்டுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளார்.

செளதாம்ப்டனில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் தாமதமாகத் தொடங்கவுள்ளது. மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக உள்ளது. இதனால் டாஸ் நிகழ்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT