செய்திகள்

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை குறித்து இரு வாரங்களில் முடிவு

DIN

2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி குறித்த இறுதி முடிவை இரு வாரங்களில் எடுக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி, 2021 பிப்ரவரி 6 முதல் மார்ச் 7 வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அரசியல் காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகளைப் பகிர்ந்தளித்துள்ளது ஐசிசி. இதன்மூலமாக இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா (37), இங்கிலாந்து (29) மற்றும் தென் ஆப்பிரிக்கா (25) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஐந்தாவது அணியாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 17 புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து அணி, போட்டியை நடத்தும் நாடு என்பதன் அடிப்படையில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது. இந்த ஐந்து அணிகளோடு மீதமுள்ள 3 அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. 

இலங்கையில் ஜூலை 3 முதல் 19 வரை மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன. இதிலிருந்து 3 அணிகள் 2021-ல் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களை ஐசிசி ஒத்திவைத்துள்ளது. 

இந்நிலையில் 2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி குறித்த இறுதி முடிவை இரு வாரங்களில் எடுக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சேர்மன் கூறியுள்ளார். 

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டியை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பதாக ஐசிசி நேற்று அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT