செய்திகள்

ஆகஸ்ட் 1 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டம்

8 ஐபிஎல் அணிகளும் 50 நாள்களில் 60 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக வரும் சனிக்கிழமையன்று ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது.

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்து அனுப்பிய கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் உஸ்மானி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக வரும் சனிக்கிழமையன்று ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

8 ஐபிஎல் அணிகளும் 50 நாள்களில் 60 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள், போட்டி அட்டவணை, கரோனா அச்சுறுத்தல் காரணமாக எடுக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என ஐபிஎல் போட்டி பற்றிய அனைத்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT