செய்திகள்

235க்கு கட்டுப்பட்ட நியூஸிலாந்து: 7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸில் இந்தியா

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி இந்தியாவை விட 7 ரன்கள் பின்தங்கியது.

DIN

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி இந்தியாவை விட 7 ரன்கள் பின்தங்கியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் வெலிங்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூஸிலாந்து.

இந்நிலையில் கிறைஸ்ட்சா்ச் நகரில் சனிக்கிழமை இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியில் இஷாந்த் சா்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் சோ்க்கப்பட்டிருந்தாா். நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளா் நீல் வாக்னா் சோ்க்கப்பட்டிருந்தாா்.

ஹேக்லி ஓவல் மைதான பிட்ச் பந்துவீச்சுக்கு உதவும் என்பதை கருதி, டாஸ் வென்ற நியூஸிலாந்து, பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விஹாரி 55, புஜாரா 54, பிருத்வி ஷா 54 ரன்கள் சேர்த்தனர். நியூஸி. தரப்பில் ஜேமிஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாதம் 52, ஜேமிஸன் 49 ரன்கள் எடுத்திநர். முகமது ஷமி 4 விக்கெட்டுகள், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், 7 ரன்கள் முன்னிலைப் பெற்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பேருந்து வசதி இல்லாததால் மக்கள் அவதி

சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

SCROLL FOR NEXT