செய்திகள்

நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியா 2-0 என ஒயிட்-வாஷ் தோல்வி

2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 2-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 

DIN

2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 2-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 

கிறைஸ்ட்சா்ச் நகரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விஹாரி 55, புஜாரா 54, பிருத்வி ஷா 54 ரன்கள் சேர்த்தனர். நியூஸி. தரப்பில் ஜேமிஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாதம் 52, ஜேமிஸன் 49 ரன்கள் எடுத்திநர். முகமது ஷமி 4 விக்கெட்டுகள், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 124 ரன்களுக்குச் சுருண்டது. போல்ட் 4 விக்கெட்டுகளையும், சௌதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், 132 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இதன்மூலம் ஒருநாள் தொடரையடுத்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஒயிட்-வாஷ் தோல்வியை சந்தித்தது.

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி முதன்முறையாக ஒரு தொடரை இழந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி குத்தாட்டத்தில் அப்தி அப்தி!

பிக் பாஸ் சென்ற பிரபலம்! சிந்து பைரவி தொடர் நடிகர் மாற்றம்!

பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?: அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பு: பிரதமர் மோடி!

அரசு திட்டங்கள் பெயரில் மோசடி! மக்களே உஷார்! | Cyber Shield

SCROLL FOR NEXT