செய்திகள்

தென் ஆப்பிரிக்க தொடர்: பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான இரு ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

DIN

தென் ஆப்பிரிக்காவுடனான இரு ஒருநாள் போட்டிகளும் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. தரம்சாலாவில் நடைபெறவிருந்த முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 (லக்னோ) மற்றும் மார்ச் 18 (கொல்கத்தா) ஆகிய இடங்களில் அடுத்த இரு ஒருநாள் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், கரோனை வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக ஒருநாள் தொடரை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது என்றால், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டது.

இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் பிசிசிஐ வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த வகையில் பார்வையாளர்களின்றி மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களும் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT