செய்திகள்

இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு!

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எழில்

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி, இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. முதல் டெஸ்ட், மார்ச் 19 அன்று தொடங்க இருந்தது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மார்ச் 31 அன்று நிறைவடைய இருந்தது.

டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விளையாடியது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து நாடு உடனடியாக நாடு திரும்புகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வேறொரு தருணத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

SCROLL FOR NEXT