செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பதிலாக இந்தியா - பாகிஸ்தான், ஆஷஸ் தொடர்கள்: பிராட் ஹாக் யோசனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர்களை ரத்து செய்து பரபரப்பான கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என...

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பதிலாக இந்தியா - பாகிஸ்தான், ஆஷஸ் தொடர்களை நடத்த வேண்டும் என்று ஐசிசிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

இந்த வருட இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் ஆடவுள்ளது. கரோனா பாதிப்பினால் இதுபோன்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர்களை ரத்து செய்து பரபரப்பான கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் பிராட் ஹாக் கூறியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நீக்கப்பட வேண்டும். சிறிது காலத்துக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர்களை நிறுத்தி வைக்கலாம். கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் மக்களுக்குப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா - பாகிஸ்தான், ஆஷஸ் தொடர்களை நடத்தலாம். சவாலான போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 2 டெஸ்டுகள் இந்தியாவிலும் 2 டெஸ்டுகள் பாகிஸ்தானிலும் நடைபெற வேண்டும். பல ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெறவேயில்லை. மக்கள் இத்தொடருக்காக ஏங்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT