படம் - AP 
செய்திகள்

ஸ்டீவ் வாஹ் போன்ற சுயநலம் கொண்ட ஒரு வீரருடன் விளையாடியதில்லை: ஷேன் வார்னே

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் போன்ற சுயநலம் கொண்ட ஒரு வீரருடன் தான் விளையாடியதில்லை என ஷேன் வார்னே கூறியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் போன்ற சுயநலம் கொண்ட ஒரு வீரருடன் தான் விளையாடியதில்லை என ஷேன் வார்னே கூறியுள்ளார்.

ட்விட்டரில் ராப் மூடி என்கிறவர் கிரிக்கெட் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 104 முறை ரன் அவுட்களில் பங்கேற்றுள்ளார். அதில் அவருடன் விளையாடிய வீரர்கள் 73 முறை ரன் அவுட் ஆகியுள்ளார்கள் என்கிற தகவலோடு அது தொடர்பான விடியோவையும் வெளியிட்டார். இதைத் தயாரிக்கத் தனக்கு 24 மணி நேரம் ஆனதாகக் கூறினார்.

இதைப் பற்றி ஷேன் வார்னே கூறியதாவது:

நான் பலமுறை கூறியுள்ளேன். ஸ்டீவ் வாஹை நான் வெறுக்கவில்லை. என்னுடைய சிறந்த ஆஸ்திரேலிய அணியில் அவரையும் தேர்வு செய்திருந்தேன். ஆனால் என்னுடன் விளையாடிய வீரர்கள், ஸ்டீவ் வாஹை விடவும் சுயநலம் கொண்ட இன்னொரு வீரர் கிடையாது. இந்தப் புள்ளிவிவரம் அதை உறுதி செய்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பென்னாகரத்தில் ஜனநாயகன் படப் பேனர்கள் அகற்றம்!

சங்கிக் குழு பொங்கலில் பராசக்தி குழு! காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்

நீதிக் கதைகள்! நீங்கள் கேட்ட நரகம்!

கரும்பு ஆலையில் பராமரிப்புப் பணியின் போது விபத்து: 2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் டி20 தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT