செய்திகள்

உலகக் கோப்பை வெற்றியாளர்: மே.இ. தீவுகள் வீரர் சாமுவேல்ஸ் ஓய்வு

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் ஓய்வு பெற்றுள்ளார். 

39 வயது சாமுவேல்ஸ் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெறுவது பற்றி தன்னிடம் கூறியதாக கிரிக்கெட் மேற்கிந்தியத் தீவுகள் அமைப்பின் தலைமை அதிகாரி ஜானி கிரேவ் அறிவித்துள்ளார். 

2000-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான சாமுவேல்ஸ், 2018 டிசம்பரில் கடைசியாக விளையாடினார். 71 டெஸ்டுகள், 207 ஒருநாள், 67 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 7 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்களும் எடுத்துள்ளார். டெஸ்டில் 3917, ஒருநாள் ஆட்டத்தில் 5606, டி20யில் 1611 ரன்கள் எடுத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்ற இரு டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இறுதிச்சுற்று ஆட்டங்களில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றவர் சாமுவேல்ஸ். 2012 டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கைக்கு எதிராக 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். 1979-க்குப் பிறகு அப்போதுதான் மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றது. நான்கு வருடங்கள் கழித்து, கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக 66 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து மீண்டும் தனது அணி உலகக் கோப்பையை வெல்ல உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் 152 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT