செய்திகள்

ஆஸ்திரேலியா தொடர்: சிட்னிக்குச் சென்ற இந்திய அணி வீரர்கள்!

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் வந்தார் கோலி...

DIN

ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபையிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு இந்திய அணி இன்று சென்றுள்ளது. சிட்னி நகரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிட்னி ஒலிம்பிக் பார்க் ஏரியா பகுதியில் உள்ள புல்மேன் விடுதியில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அடுத்த 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். இந்தக் காலக்கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் இந்திய அணியினர் பயிற்சி பெறுவார்கள். வழக்கமாக நகரில் உள்ள இன்டர் காண்டினென்டல் விடுதியில் இந்திய வீரர்கள் தங்குவார்கள். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை நகருக்கு சற்று வெளியே தங்க வைக்கப்படுகிறார்கள். 14 நாள்களுக்குப் பிறகு சிட்னி நகருக்குள் இந்திய வீரர்கள் அழைத்து வரப்படுவார்கள். அதன்பின்னர், சிட்னி மைதானத்திலும் பயிற்சிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள். 

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் வந்தார் கோலி. ஆனால் அனுஷ்கா சர்மா தற்போது கருவுற்றிருப்பதால் அவர் நேரடியாக இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். முதல் டெஸ்ட் ஆடி முடித்த பிறகு விராட் கோலியும் குழந்தை பிறப்பதற்கு முன்பு இந்தியாவுக்குத் திரும்பி விடுவார். 

இரு அணிகள் மோதும் தொடர்கள் ஆஸ்திரேலியாவில் ஃபாக்ஸ், செவன் தொலைக்காட்சிகளிலும் இந்தியாவில் சோனி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

SCROLL FOR NEXT