செய்திகள்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கோல்ப் விளையாடும் கபில் தேவ்

DIN

நெஞ்சுவலி காரணமாக கடந்த மாத இறுதியில் புதுதில்லி ஃபோா்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில்தேவுக்கு இதய அறுவைச் சிகிச்சை (ஆஞ்சியோ பிளாஸ்டி) நடைபெற்றது.

நள்ளிரவு 1 மணி அளவில் கபில் தேவுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவா் தில்லியில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.

61 வயதான கபில்தேவ், கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டா்களில் ஒருவராக கருதப்படுகிறாா். 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்றதுடன் இந்தியாவுக்கு முதல் முறையாகக் கோப்பையையும் பெற்றுத் தந்தாா். இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார். 

இந்நிலையில் மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார் கபில் தேவ். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 1994 முதல் கோல்ப் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்த கோல்ப் விளையாட்டில் மீண்டும் பங்கேற்றுள்ளார். இதுகுறித்த விடியோவை அவர் வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT