செய்திகள்

கடினமான ஆடுகளத்திலும் டி வில்லியர்ஸ் அதிரடி: கோலி

DIN

ஷார்ஜா மைதானத்தின் கடினமான ஆடுகளத்தில் இதர பேட்ஸ்மேன்கள் விளையாடத் தடுமாறும் நிலையில், டி வில்லியர்ஸ் அங்கும் அதிரடியாக ஆடுகிறார் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறினார். 
ஷார்ஜாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர். முதலில் ஆடிய பெங்களூர் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களுக்கு வீழ்ந்தது. 33 பந்துகளில் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்த பெங்களூர் வீரர் டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் ஆனார். 
இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிறகு கோலி கூறியதாவது: 
ஷார்ஜா ஆடுகளம் வறண்டதாகும். வானிலை இதமாக இருந்ததால் பனி விழுந்து ஆடுகளம் ஈரப்பதம் அடையாது என்று எண்ணினோம். சுமார் 165 ரன்கள் எடுப்பது குறித்தே யோசித்தோம். ஆனால் 194 ரன்கள் அடித்தோம். எல்லா பேட்ஸ்மேன்களும் ஆடுவதற்கு தடுமாறும் அந்த ஆடுகளத்தில் டி வில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 
ஷாட்கள் அடிப்பதற்கு மிக சாதகமாக பந்து வருவதாக எண்ணத் தொடங்கிய பிறகே நான் பேட்டை சுழற்றத் தொடங்கினேன். 
ஆனால் டி வில்லியர்ஸ் தனது 3-ஆவது பந்திலிருந்தே அடித்து ஆடத் தொடங்கினார். இதுபோன்ற பேட்டிங்கை அவரால் மட்டுமே கையாள இயலும். அவரது ஆட்டம் அருமையானதாக இருந்தது. 
பார்ட்னர்ஷிப் அமைத்து நாங்கள் ரன் சேர்த்தது மகிழ்ச்சி. கொல்கத்தா போன்ற அணிக்கு எதிரான இந்த வெற்றி சிறப்பானது. கொல்கத்தா இன்னிங்ஸில் கம்மின்ஸ் - ரஸ்ஸெல் களத்தில் ஆடியபோது இலக்குக்கு தேவையான ரன் மிகக் குறைவாகவே இருந்தது. எனினும் பந்துவீச்சு, பீல்டிங்கை சரியாகக் கையாண்டு கொல்கத்தாவை கட்டுப்படுத்தினோம் என்று கோலி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT