செய்திகள்

அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை அறிவிப்பு

ஜனவரி 19 அன்று இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் முடிவடைகிறது. 

DIN

ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்கள் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் இரு அணிகளும் விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

டிசம்பர் 17-21 வரை அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 19 அன்று இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் முடிவடைகிறது. 

இரு அணிகளும் தலா மூன்று ஒருநாள், டி20 தொடர்களிலும் நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் விளையாடுகின்றன. 

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: நவம்பர் 27, சிட்னி (பகலிரவு)
2-வது ஒருநாள்: நவம்பர் 29, சிட்னி (பகலிரவு)
3-வது ஒருநாள்: டிசம்பர் 2, கேன்பரா (பகலிரவு)

டி20 தொடர்

முதல் டி20: டிசம்பர் 4, கேன்பரா (பகலிரவு)
2-வது டி20: டிசம்பர் 6, சிட்னி (பகலிரவு)
3-வது டி20: டிசம்பர் 8, சிட்னி (பகலிரவு)

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: டிசம்பர் 17 - 21, அடிலெய்ட் (பகலிரவு) 
2-வது டெஸ்ட்: டிசம்பர் 26 - 30, மெல்போர்ன் 
3-வது டெஸ்ட்: ஜனவரி 7 - 11, சிட்னி
4-வது டெஸ்ட்: ஜனவரி 15 - 19, பிரிஸ்பேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT