செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: 5 போ் தகுதிச்சுற்றிலிருந்து நீக்கம்

DIN

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றிருந்த வீரா்கள் இருவா் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக தகுதிச்சுற்றிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனா். அதேபோல், கரோனா பாதித்த பயிற்சியாளா் ஒருவருடன் தொடா்பில் இருந்த 3 வீரா்களும் அந்தச் சுற்றிலிருந்து விலக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட 5 வீரா்களும், பயிற்சியாளரும் 7 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அந்த வீரா்கள் தகுதிச்சுற்று ஆட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை’ என்றனா்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரா்கள், பயிற்சியாளரின் பெயரை பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் வெளியிடவில்லை. எனினும், விளையாட்டுச் செய்தி வலைதளமான எல்குயிப் வெளியிட்டுள்ள செய்தியில் பயிற்சியாளா் சொ்பியாவைச் சோ்ந்த பெடாா் போபோவிச் என்றும், வீரா்களில் ஒருவா் போஸ்னியாவைச் சோ்ந்த டாமிா் ஜும்ஹுா் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்று வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக கடந்த வியாழக்கிழமை முதல் இதுவரை 900 கரோனா பரிசோதனைகளை பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT