பொலார்ட் - ஷாருக் கான் 
செய்திகள்

பொலார்ட்டுடன் ஒப்பிட்டு தமிழக வீரர் ஷாருக்கானைப் பாராட்டும் கும்ப்ளே

இப்போது என்னால் பந்துவீச முடியாது. ஷாருக் கானுக்கு நான் பந்துவீசப் போவதில்லை என்றார்.

DIN

தமிழக வீரர் ஷாருக் கானைப் பிரபல வீரர் கிரோன் பொலார்ட்டுடன் ஒப்பிட்டுப் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் னில் கும்ப்ளே. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது வீரர் ஷாருக் கான், 5 முதல் தர ஆட்டங்களிலும் 25 லிஸ்ட் ஏ, 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தமிழக அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் பெற்ற ஷாருக் கானை, ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. 

இந்நிலையில் ஷாருக் கானின் திறமை பற்றி பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியதாவது:

ஷாருக்கான் பொலார்ட்டைக் கொஞ்சம் நினைவுபடுத்துகிறார். மும்பை அணியில் நான் இருந்தபோது வலைப்பயிற்சியில் அதிரடியாக விளையாடுவார் பொலார்ட். நான் பந்துவீசும்போது அவரிடம் சொல்லிவிடுவேன், பந்தை நேராக அடிக்காதே என்று. இப்போது என்னால் பந்துவீச முடியாது. ஷாருக் கானுக்கு நான் பந்துவீசப் போவதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT