முகப்பு
செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் சிக்ஸர்களைப் பறக்கவிடும் தோனி (விடியோ)

​சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்திய பயிற்சி ஆட்டத்தின் விடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடத்திய பயிற்சி ஆட்டத்தின் விடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

14-வது ஐபிஎல் சீசனுக்குத் தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி ஆட்டத்தை மேற்கொண்டது. சென்னை அணியே இரண்டாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முக்கியத் தருணங்கள் நிறைந்த விடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் தோனி பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டுகிறார். அவருடைய பேட்டிங் நிலையையே இது வெளிப்படுத்துகிறது. நீண்ட நாள்களாக தொழில்முறை கிரிக்கெட்டில் பங்கேற்காத சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் நிலையும் இதில் வெளிப்பட்டது. இதுதவிர காயம் காரணமாக நீண்ட நாள்களாக களத்தில் இறங்காத ரவீந்திர ஜடேஜா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டு பிளெஸ்ஸி உள்ளிட்டோரும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர்.

கடந்த ஐபிஎல் சீசனில் சோபிக்கத் தவறிய சென்னை அணி, இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →