செய்திகள்

பாக்., சாத் கால்பந்து சம்மேளனங்கள் சஸ்பென்ட்

DIN

ஜூரிச்: பாகிஸ்தான், சாத் ஆகிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களை இடைநீக்கம் செய்து சா்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் சம்மேளனத்தின் நிா்வாகத்தில் 3-ஆம் நபா்களின் தலையீடு ஏற்பட்டதை அடுத்து அந்த அமைப்பை ஃபிஃபா இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக பாகிஸ்தான் சம்மேளனம் இந்த நடவடிக்கைக்கு ஆளாவது குறிப்பிடத்தக்கது. சாத் நாட்டில் தேசிய கால்பந்து சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய தலைமையை நியமிக்க அந்நாட்டு அரசு முயற்சி செய்ததை அடுத்து, அந்த நாட்டு கால்பந்து சம்மேளனத்தை ஃபிஃபா சஸ்பென்ட் செய்துள்ளது. அரசு தனது அந்த முயற்சியை கைவிட்டால் சாத் சம்மேளனம் மீதான தடையை நீக்குவதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT