டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-இல் மோதவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி20 உலகக் கோப்பை 2021, அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மாதம் அறிவித்தது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால், இரு அணிகளும் நேரடியாக மோதிக்கொள்ளவுள்ளது.
இதையும் படிக்க | முதல் டெஸ்டில் அஸ்வின், இஷாந்த் இல்லை: இங்கிலாந்து முதல் பேட்டிங்
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் ஆட்டம் அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவலறிந்த வட்டாரங்களிடம் கேட்டதற்கு, இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 24-ம் தேதிதான் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.