செய்திகள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷுக்கு ரூ. 2 கோடி: கேரள அரசு

ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு கேரள அரசு ரூ. 2 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

DIN


ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு கேரள அரசு ரூ. 2 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

கேரள அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளிப்பது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதையும் படிக்கநீரஜ் சோப்ராவுக்குக் கெளரவம்: ஆகஸ்ட் 7, தேசிய ஈட்டி எறிதல் தினம்
 
கேரள கல்வித் துறையில் துணை இயக்குநராக (விளையாட்டு) இருக்கும் ஸ்ரீஜேஷுக்கு இணை இயக்குநராக (விளையாட்டு) பதவி உயர்வு வழங்க முடிவெடுக்கப்பட்டன. அவருக்கு மேலும் ரூ. 2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒலிம்பிக்கில் பங்கேற்ற 8 கேரள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்குவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT