செய்திகள்

பாராலிம்பிக்ஸ் தொடக்க விழா: நேரலை விடியோ

பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழா, டோக்கியோவிலுள்ள ஒலிம்பிக் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

DIN

மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டி 2020 டோக்கியோவில் இன்று தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். 

இந்தியாவில் இருந்து 54 போ் கொண்ட அணி பங்கேற்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டி நடத்தப்படும். 

தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றார். ஆனால் விமானப் பயணத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் தங்கவேலு உள்பட இந்திய அணியைச் சேர்ந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால்  தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை டேக் சந்த் பெற்றுள்ளார்.

பாராலிம்பிக் போட்டி இந்தியாவில் தூர்தர்ஷன், டிடி ஸ்போர்ட்ஸ், யூரோஸ்போர்ட் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. அதேபோல பிரச்சார் பாரதி ஸ்போர்ட்ஸ் (Prasar Bharati Sports) யூடியூப் சேனலிலும் நேரலையாகக் காணலாம்.

பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழா, டோக்கியோவிலுள்ள ஒலிம்பிக் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் நேரலை விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரே... பிரீத்தி முகுந்தன்!

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

SCROLL FOR NEXT