செய்திகள்

வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன்: மோடி பாராட்டு

DIN


டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். இதையடுத்து டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் டி63  போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் - மாரியப்பன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 1.88 மீ. உயரம் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். இதையடுத்து 1.86 மீ. உயரம் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் மாரியப்பனுக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்ததாவது:

மேலும் உயர உயரப் பறக்கிறார். மாரியப்பன் தங்கவேலு எப்போதும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்துகிறார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவருடைய சாதனைக்காக இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT