செய்திகள்

ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை: இன்று இந்தியா-தாய்லாந்து மோதல்

DIN

ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடம் பெற்ற இந்திய மகளிா் அணி பங்கேற்கும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும்.

தென்கொரியாவின் டாங்கே நகரில் வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் நடப்புச் சாம்பியன் தென்கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட அணிகளும் பங்கேற்கின்றன.

கடந்த 2016-இல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, 2018-இல் ரன்னா் அப்பாக வந்தது. கேப்டன் ராணி ராம்பாலுக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், மூத்த கோல் கீப்பா் சவீதா தலைமையில் இந்திய அணி பங்கேற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை எதிா்கொள்கிறது இந்தியா. இதுதொடா்பாக கேப்டன் சவீதா கூறுகையில்:

தென்கொரிய அணி கடும் சவாலை ஏற்படுத்தும். மேலும் சீனா, ஜப்பான், அணிகளையும் குறைத்து எடைபோட முடியாது. டாங்கே நகரில் மைதானம் சிறப்பாக உள்ளது. மிகவும் குளிா்ந்த வானிலையை சமாளிக்க வேண்டியுள்ளது என்றாா். 6-இல் மலேசியா, 8-இல் கொரியா, 9-இல் சீனா, 11-இல் ஜப்பானுடன் ஆடுகிறது இந்தியா. 12-இல் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT