செய்திகள்

ஆஷஸ்: விளையாடும் லெவனை அறிவித்தார் புதிய கேப்டன் கம்மின்ஸ்

ஆஷஸ் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

DIN


ஆஷஸ் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் முதல் டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் புதன்கிழமை தொடங்குகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் பெயின் விலகியதையடுத்து, புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் களமிறங்குகிறார்.

இந்த நிலையில், முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ள வீரர்கள் பட்டியலை கம்மின்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

அனுபவ வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு அணியில் இடமில்லை. அவருக்குப் பதில் டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 5-வது வரிசை பேட்டராக களமிறங்குவார் என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க்கும் களமிறங்கவுள்ளதாக கம்மின்ஸ் அறிவித்திருக்கிறார்.

முதல் டெஸ்ட் ஆட்டத்துக்கான ஆஸ்திரேலிய அணி:  

மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஜோஷ் ஹேசில்வுட். 

அதேசமயம், இங்கிலாந்து அணியை அறிவிக்க அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மறுத்துவிட்டார். அடுத்த இரண்டு நாள்களில் சூழலுக்கு ஏற்ப ஆடுகளம் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பொறுத்து அணி பின்னர் அறிவிக்கப்படும் என்றார் ரூட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரக்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

4 மாநிலங்களில் ரூ. 24,634 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜக எம்.பி.யை சந்தித்து நலம் விசாரித்த மமதா!

மயிலியர்றளர் பொல்கி... மடோனா!

SCROLL FOR NEXT