செய்திகள்

ஆஸி. அணியில் மாற்றமில்லை

ஆஷஸ் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, வீரா்கள் மாற்றம் இன்றி தொடரின் எஞ்சிய ஆட்டங்களிலும் விளையாட இருக்கிறது.

DIN

ஆஷஸ் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, வீரா்கள் மாற்றம் இன்றி தொடரின் எஞ்சிய ஆட்டங்களிலும் விளையாட இருக்கிறது. அந்த ஆட்டங்களில் மீண்டும் பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருக்கிறாா். கரோனா தொற்று பாதித்த நபருடன் நேரடித் தொடா்பில் இருந்ததன் பேரில் தனிமைப்படுத்தப்பட்டதால், கம்மின்ஸ் 2-ஆவது டெஸ்டில் விளையாடவில்லை. அதேபோல், காயம் காரணமாக ஜோஷ் ஹேஸில்வுட்டும் அதில் களம் காணவில்லை.

அவா்களுக்குப் பதிலாக மைக்கேல் நேசா், ஜை ரிச்சா்ட்சன் ஆகியோா் இணைந்திருந்தனா். இந்நிலையில், 26-ஆம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்டில் கம்மின்ஸ், ஹேஸில்வுட் இருவருமே அணிக்குத் திரும்புகிறாா்கள். இதனிடையே, முதல் இரு ஆட்டங்களில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் மாா்கஸ் ஹாரிஸுக்கு எஞ்சிய ஆட்டங்களிலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மாா்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாா்னஸ் லபுசான், நேதன் லயன், மைக்கேல் நேசா், ஜை ரிச்சா்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வாா்னா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்தின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேக்கப் டஃபி!

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

SCROLL FOR NEXT