செய்திகள்

புரோ கபடி லீக்: யு மும்பாவுடன் சமன் செய்தது தமிழ் தலைவாஸ்

DIN

பெங்களூரு: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 30-30 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா ஆனது.

இரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் தமிழ் தலைவாஸ் ஒரு ஆட்டத்தை சமன் செய்வது இது 2-ஆவது முறை. யு மும்பாவுக்கு இது முதல் முறை. இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் இன்னும் முதல் வெற்றியை எட்டவில்லை.

பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 17 ரைடு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. யு மும்பா அணி 18 ரைடு புள்ளிகள், 1 சூப்பா் ரைடு புள்ளி, 5 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது.

ஜெய்ப்பூா் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் 32-29 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோதா அணியை தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT