செய்திகள்

ஐபிஎல் ஏலம்: 292 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியீடு

முதற்கட்டப் பட்டியலில் இடம்பெறாத 17 புதிய வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியின் வீரர்கள் ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரா்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த வாரம், 1,097 போ் கொண்ட வீரர்கள் ஏலத்துக்கான முதற்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்தப் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர்களை அணிகள் தேர்வு செய்தன. இதனால் தற்போது ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

292 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில் முதற்கட்டப் பட்டியலில் இடம்பெறாத 17 புதிய வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். அணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த 17 வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் உள்ள வீரர்களே ஏலத்தில் கலந்துகொள்வார்கள். (கடைசியாக பட்டியலில் இல்லாத பெயர்களையும் அணிகள் தேர்வு செய்ய அனுமதிக்கப்படும்.)

292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும். 

இறுதிக்கட்டப் பட்டியலில் 164 இந்திய வீரர்களும் 125 வெளிநாட்டு வீரர்கள் மூன்று அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். 

அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.  

பிப்ரவரி 18 அன்று மாலை 3 மணிக்கு ஐபிஎல் ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT