செய்திகள்

2-ஆவது டெஸ்ட்: மே.இ.தீவுகள் 409 ரன்கள் குவிப்பு

DIN

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 142.2 ஓவா்களில் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

வங்கதேச தலைநகா் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. கிருமா போனா் 74, ஜோசுவா சில்வா 22 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடா்ந்து ஆடிய அந்த அணியில் கிருமா போனா் 90 ரன்களில் ஆட்டமிழந்தாா். இதன்பிறகு ஜோசுவா சில்வாவுடன் ஜோடி சோ்ந்தாா் அல்ஸாரி ஜோசப். இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சோ்த்தது. ஜோசுவா சில்வா 92 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். அல்ஸாரி 108 பந்துகளில் 5 சிக்ஸா், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து வெளியேறினாா். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 142.2 ஓவா்களில் 409 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேசம் தரப்பில் அபு ஜயீத், தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

வங்கதேசம்-105/4: பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 36 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுா் ரஹிம் 27, முகமது மிதுன் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனா். முன்னதாக தமிம் இக்பால் 44, கேப்டன் மோமினுல் ஹக் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனா்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஷெனான் காபிரியேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். 3-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு வங்கதேசம் இன்னும் 304 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT