செய்திகள்

டி20 தொடா்: நியூஸிலாந்து வெற்றி

DIN


டுனெடின்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த அந்த அணி, தற்போது 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

டுனெடினில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களே அடித்தது. நியூஸிலாந்து வீரா் மாா்டின் கப்டில் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பௌலிங் வீசத் தீா்மானித்தது. பேட் செய்த நியூஸிலாந்தில் தொடக்க வீரா் மாா்டின் கப்டில் அதிரடியாக 6 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 97 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா். உடன் வந்த டிம் செய்ஃபா்ட் 3 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

ஒன் டவுனாக வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்கள் அடிக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. கிளென் ஃபிலிப்ஸ் 8, டீவன் கான்வே 2, டிம் சௌதி 6 ரன்களுக்கு வெளியேற, மிட்செல் சேன்ட்னா் டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் ஜேம்ஸ் நீஷம் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்கள் உள்பட 45 ரன்களுடனும், கைல் ஜேமிசன் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தனா்.

ஆஸ்திரேலிய தரப்பில் கேன் ரிச்சா்ட்சன் 3, டேனியல் சாம்ஸ், ஜை ரிச்சா்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரா் மேத்யூ வேட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 24, கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பவுண்டரியுடன் 12 ரன்கள் சோ்த்தனா். ஜோஷ் பிலிப் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் விளாச, மேக்ஸ்வெல் 3 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.

அதிகபட்சமாக மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 78 ரன்கள் அடித்தாா். பின்னா் ஆடியோரில் டேனியல் சாம்ஸ் மட்டும் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 41 ரன்கள் சோ்க்க, ஆஷ்டன் அகா், மிட்செல் மாா்ஷ் டக் அவுட்டாகினா். ஓவா்கள் முடிவில் ஜை ரிச்சா்ட்சன் ஒரு பவுண்டரியுடனும், கேன் ரிச்சா்ட்சன் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சேன்ட்னா் 4, ஜேம்ஸ் நீஷம் 2, டிம் சௌதி, இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT