செய்திகள்

சிட்னி டெஸ்ட்: இரண்டு கேட்சுகளை நழுவவிட்ட ரிஷப் பந்த்!

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இரண்டு கேட்சுகளை நழுவ விட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.

டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மழையால் ஆட்டம் தடைபட்டது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது புகோவ்ஸ்கியும் லபுசானும் நிதானமாக விளையாடினார்கள். இன்றும் அற்புதமாகப் பந்துவீசினார் அஸ்வின். 22-வது ஓவரை அஸ்வின் வீசியபோது, புகோவ்ஸ்கி வழங்கிய எளிதான கேட்சை நழுவவிட்டார் ரிஷப் பந்த். இதனால் அஸ்வின் கோபமடைந்தார்.

அடுத்ததாக சிராஜ் வீசிய பவுன்சர் பந்திலும் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்தார் புகோவ்ஸ்கி. எனினும் கடினமான அந்த கேட்சையும் நழுவவிட்டார் ரிஷப் பந்த். மூன்றாம் நடுவர் கவனித்து அவுட் இல்லை என அறிவித்தார். 

ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. புகோவ்ஸ்கி 34, லபுசான் 20 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT