முகப்பு
செய்திகள்

கோலியை எப்படி ஆட்டமிழக்கச் செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை: மொயீன் அலி

டெஸ்ட் தொடரில் இந்தியக் கேப்டன் விராட் கோலியை எப்படி ஆட்டமிழக்கச் செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை என இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
கோப்புப்படம்
பகிர்:


டெஸ்ட் தொடரில் இந்தியக் கேப்டன் விராட் கோலியை எப்படி ஆட்டமிழக்கச் செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை என இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த மொயீன் அலி தெரிவித்தது:

"அவரை (கோலியை) எப்படி ஆட்டமிழக்கச் செய்வது? அவர் உலகின் தலைசிறந்த வீரர். சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கத்துடன் இருப்பார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டபோது குழந்தை பிறப்புக்காக அவர் பாதியில் நாடு திரும்பியதால் நிச்சயம் இன்னும் கூடுதல் ஊக்கத்துடன் இருப்பார்.

அவருக்கு ஏதேனும் பலவீனம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, அவரை எப்படி ஆட்டமிழக்கச் செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை. ஆனால், எங்களிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

கோலி சிறந்த மனிதர். எனக்கு நல்ல நண்பர். நாங்கள் கிரிக்கெட் குறித்து நிறைய பேசமாட்டோம்."

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்குகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →