செய்திகள்

பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

​பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN


பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிவித்தது.

இலங்கை ஒருநாள் தொடரில் இடம்பெற்ற வீரர்களில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் 16 பேர் அடங்கிய அதே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடரின் 3-வது ஆட்டத்துக்கு சேர்க்கப்பட்ட டாம் பாண்டன் பாகிஸ்தான் தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், டாம் பாண்டன், சாம் பில்லிங்ஸ், சாம் கரன், டாம் கரன், லியாம் டாசன், ஜார்ஜ் கார்டன், லியாம் லிவிங்ஸ்டன், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

முதல் ஒருநாள் ஆட்டம்: ஜூலை 8, சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்

2-வது ஒருநாள் ஆட்டம்: ஜூலை 10, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்

3-வது ஒருநாள் ஆட்டம்: ஜூலை 13, எட்ஜ்பாஸ்டன், பிர்மிங்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT