செய்திகள்

கவுன்டி கிரிக்கெட்டில் 43 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்த அஸ்வின்

DIN

இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது நியூசிலாந்து அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை இந்தியாவின் அஸ்வின் பெற்றார். 14 ஆட்டங்களில் 71 விக்கெட்டுகளை எடுத்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் அஸ்வின். சர்ரே அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின், ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாளில் 28 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். காயமடைந்த நியூசி. வீரர் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக அஸ்வின் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் சோமர்செட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 148.5 ஓவர்களில் 429 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 43 ஓவர்கள் வீசி 99 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்துள்ளார். அதிக விக்கெட் எடுக்காமல் போனாலும் 43 ஓவர்கள் வீசியதால் டெஸ்ட் தொடருக்கான நல்ல பயிற்சி அஸ்வினுக்குக் கிடைத்துள்ளது. இந்த ஆட்டம் முடிந்தபிறகு இந்திய அணியினருடனான பயிற்சியில் அவர் இணைந்து கொள்வார். 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT