செய்திகள்

கெய்ல் சிக்ஸர் மழை: டி20 தொடரில் ஆஸ்திரேலியா தோல்வி (ஹைலைட்ஸ் விடியோ)

கெய்ல் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து அசத்தினார். 

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ளது.

கிராஸ் ஐலெட்டில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹென்ரிகஸ் 33 ரன்கள் எடுத்தார். ஹேடன் வால்ஷ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

இதையடுத்து விளையாடிய மே.இ. தீவுகள் அணிகள் அணி, கிறிஸ் கெயிலின் அதிரடியால் இலக்கைச் சுலபமாக அடைந்தது. 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து 3-வது டி20 ஆட்டத்தையும் டி20 தொடரையும் வென்றது மே.இ. தீவுகள் அணி. கெய்ல் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து அசத்தினார்.

5 ஆட்டங்கள் டி20 தொடரில் மே.இ. தீவுகள் அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. 1995 மார்ச் மாதத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தொடரை மே.இ. தீவுகள் அணி வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT