செய்திகள்

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி கடந்து வந்த பாதை

DIN

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி  ஒலிம்பிக் போட்டிகளில்   தன்னுடைய நீண்ட நெடிய பயணத்தை தொடர்ந்து வருகிறது. வேறு எந்த நாடும் ஒரு விளையாட்டின் மூலம்   இத்தனை பெரிய பங்களிப்பை அளித்த வரலாறு இல்லை.  1928 முதல் 1956 வரை பங்கேற்ற அத்தனை ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றதுடன் அதுவரை எந்த சுற்றுகளிலும் தோற்காத அணி என்கிற பெருமையையும் அடைந்தது. 

பின் 1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்  பாகிஸ்தான் அணியுடன் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தனர். இருப்பினும் 1964 ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்கம் வென்றனர். 

இது இந்திய அணி செய்து வருகிற சாதனைகளின் பொற்காலம் எனக் கருதப்பட்டபோது 1976 ஆம் ஆண்டு பங்கேற்ற ஒலிம்பிக்கில் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து  அதிர்ச்சி அளித்தனர்.  

ஆனால் 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு  8வது  முறையாக தங்கம் வென்று அசத்தியது இந்திய ஹாக்கி அணி.  பின் 2008 ஆம் ஆண்டு முதல்முறையாக தொடர் தோல்விகளால் ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பை இழந்தது. 

தற்போது அரை நூற்றாண்டிற்கு பின்  நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில்   இரண்டாவது முறையாக தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைப்பார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT