செய்திகள்

இலங்கையுடனான ஆட்டத்துக்கு தோனி மிகப் பெரிய காரணி: தீபக் சஹார்

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் மிகப் பெரிய காரணி என தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

DIN


இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் மிகப் பெரிய காரணி என தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், தீபக் சஹார் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அப்போதே சென்னை சூப்பர் கிங்ஸின் தோனியிடம் இருந்த தாக்கமே சஹாரின் இந்த ஆட்டம் என பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதை உறுதி செய்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது:

"ஆட்டங்களை எம்எஸ் தோனி முடிக்கும் விதத்தைப் பார்ப்பது மிகப் பெரிய காரணி. நீண்ட நாள்களாக நான் அவரை கவனித்து வருகிறேன். அவர் இன்னிங்ஸை முடிப்பதையே எப்போதும் பார்த்திருக்கிறேன். அவரிடம் பேசும்போது எப்போதுமே ஆட்டத்தை முடிந்தவரை கடைசி வரை எடுத்துச் செல்ல அறிவுறுத்துவார். அனைவருக்கும் வெற்றி பெற வேண்டும். ஆனால், ஆட்டம் கடைசி வரை செல்லும்போது அனைவரும் செயலாற்றுவது விறுவிறுப்பாக இருக்கும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறதி நோயைத் தடுக்க... தமிழக அரசு எடுத்த புதிய முன்னெடுப்பு!

மாநிலங்களவை எம்.பி.! அதிமுக ஆதரவு யாருக்கு? ஜி.கே. வாசன் Vs அன்புமணி Vs பிரேமலதா!

பொறியியல் கல்வி! படைப்பாற்றலை கற்றுத் தரும் ஆட்டோமொபைல்!

தில்லி உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

லோகா - 2 படப்பிடிப்பு எப்போது? கல்யாணி பதில்!

SCROLL FOR NEXT