செய்திகள்

எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு: செப்.19-ல் சென்னை-மும்பை மோதல்

ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இறுதிப் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் தில்லி, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 3 படங்கள்!

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை! உறவினர்கள் மறியல்!

தூத்துக்குடி நகைக் கடையில் திருட்டு! மும்பை தப்ப முயன்ற இளைஞர் சேலத்தில் கைது!

SCROLL FOR NEXT