செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: பரிசுத்தொகை விவரங்கள் அறிவிப்பு

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ. 11.72 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு - மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 11.72 கோடி (1.6 மில்லியன் டாலர்) பரிசுத்தொகையாக வழங்கப்படும் என ஐசிசி இன்று தெரிவித்துள்ளது. இறுதி ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு ரூ. 5.86 கோடி (800,000 டாலர்) கிடைக்கும். இறுதி ஆட்டம் டிராவில் முடிவடைந்தால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT