மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் தெ.ஆ. அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.
கிராஸ் ஐலெட்டில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் மூன்று விக்கெட்டுகளை 37 ரன்களுக்கு இழந்த தெ.ஆ. அணி பிறகு மீண்டு வந்தது. கேப்டன் எல்கர் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில், 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. டி காக் 59, வியான் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.