செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தோனியை முந்தினார் கோலி

DIN


இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு இது 61-வது டெஸ்ட் ஆட்டம். இதன்மூலம், அதிக டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

2014-இல் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மகேந்திர சிங் தோனி 60 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இந்த சாதனையை கோலி தற்போது முந்தியுள்ளார்.

சர்வதேச அளவில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் 109 டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார். 100 டெஸ்ட் ஆட்டங்களுக்கும் மேல் அணியை வழிநடத்தியுள்ள ஒரே கேப்டன் க்ரீம் ஸ்மித் மட்டுமே. அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் 93 டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT